அடுத்த குண்டைப் போட்ட மிஷ்கின்!

அடுத்த குண்டைப் போட்ட மிஷ்கின்!

செய்திகள் 20-Jun-2013 11:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘என்னடா... இன்னும் ஒண்ணும் சொல்லாம இருக்காரே’ன்னு மீடியாக்கள் வெறும் வாயோட காத்துக் கொண்டிருக்க, ‘நல்லா மெல்லுங்கப்பா..’ என அவலை எடுத்து அவரே வாயில் போட்டுவிடவும் செய்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். லோன் வுல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்து, இயக்கும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் மிஷ்கின்தான் வில்லனாம். கூலிப்படைத் தலைவன் மிஷ்கினிடம் மாட்டி, நாயகன் ஸ்ரீ படும் அவஸ்தைகளே படத்தின் கதைக்களம்.

இந்தப் படத்தைப் பற்றி மிஷ்கின் கூறுகையில், ‘‘இந்தப் படத்துல ஹீரோயின், பாட்டு, ஃபிளாஷ்பேக் இப்படி எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க இளையராஜாவோட ரீ-ரிக்கார்டிங்தான் ஹீரோ. இனிமே என் படத்துக்கு ஹீரோக்கள் தேவையில்லை. கதையை நம்பி மட்டுமே படம் இயக்குவேன்’’ என ‘நச்’ முத்து உதிர்த்திருக்கிறார்.

‘‘நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்...’’ - எந்த ஹீரோவோட மைன்ட் வாய்ஸோ!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;