ரீமா கல்லிங்கல் மதம் மாறுகிறாரா?

ரீமா கல்லிங்கல் மதம் மாறுகிறாரா?

செய்திகள் 20-Jun-2013 11:17 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘யுவன் யுவதி’ படத்தில் நடித்த மலையாள நடிகை ரீமா கல்லிங்கலும் - மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவும் திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்து வருவதாக வந்த பரபரப்பு செய்திகளைத் தொடர்ந்து, இருவரும் தங்கள் காதலிப்பதை ஒப்புக்கொண்டதோடு விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் அறிவித்திருந்தனர். அத்துடன் அந்த பரபரப்பு நின்றுபோன நிலையில் இப்போது மீண்டும், ‘ரீமா இஸ்லாம் மதத்துக்கு மாற இருக்கிறார்’ என்று யாரோ சிலர் திரி கொளுத்தி போட, விஸ்வரூபம் எடுத்தது அந்த செய்தி.

இந்நிலையில் நேற்று கேரளாவில் நடந்த பள்ளி விழா ஒன்றில் ரீமா கல்லிங்கலும், ஆஷிக அபுவும் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது விழா முடிந்து கிளம்பி கொண்டிருந்த ரீமாவிடம் நிருபர்கள், மதம் மாறுவது குறித்து கேட்டபோது, ‘’வேலையில்லாதவர்கள் கிளப்பி விடும் வதந்திகள் அவை, எந்த மதம் ஆனாலும் மனிதன் மனிதனாக இருந்தாலே போதும், என்னிடம் மதம் மாறும் எண்ணமெல்லாம் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை’’ என்று துணிச்சலாக பதில் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;