தனுஷுக்கு ஜோடியாகும் புது நடிகை!

தனுஷுக்கு ஜோடியாகும் புது நடிகை!

செய்திகள் 20-Jun-2013 11:10 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மாற்றான்’ படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் தனுஷ்தான் ஹீரோ என்பது ஏற்கெனவே முடிவான விஷயம். அதேபோல் இப்படத்திற்கு அனிருத்தான் இசையமைக்க இருக்கிறார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்க, ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் தனுஷுடன் ஜோடிபோட இருப்பவர் யார் என்பதுதான் லேட்டஸ்ட் சென்சேஷன்! ஆம்... இந்தப் படத்தின் மூலம் இன்னொரு பாலிவுட் பைங்கிளியுடன் ஜோடி போட இருக்கிறாராம் தனுஷ். கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்து ஹிட்டான ‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்’ பாலிவுட் படத்தின் நாயகி அலியா பட் தான் தனுஷுக்கு ஜோடியாகிறாராம். தன் முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்த இந்த இருபது வயது அழகுப் பதுமை, தற்போது தமிழர்களின் நெஞ்சத்திலும் குடியிருக்க வருகிறார்.

வாங்க... பழகலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;