ஹன்சிகாவுக்கு ‘மான் கராத்தே’ சொல்லி கொடுக்கும் சிவகார்த்திகேயன்!

ஹன்சிகாவுக்கு ‘மான் கராத்தே’ சொல்லி கொடுக்கும் சிவகார்த்திகேயன்!

செய்திகள் 20-Jun-2013 11:05 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தைத் தொடர்ந்து ஹன்சிகா மோத்வானி, நடித்துள்ள சூர்யாவின் ‘சிங்கம் 2’ வருகிற 5-ஆம் தேதி திரைக்கு வருவிருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து கார்த்தியுடன் 'பிரியாணி' படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தி;ல் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக பணியாற்றிய திருக்குமரன் இயக்க இருக்கிறார்.

'எதிர் நீச்சல்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இப் படத்திற்கு 'மான் கராத்தே' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தினை ஏ.ஆர்.முருகாதஸ் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். படத்தில், ஹன்சிகாவுக்கு மான் கராத்தே சொல்லிக் கொடுப்பாரோ சிவகார்த்திகேயன்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;