இந்தியாவிலேயே தமிழர்கள்தான் பெஸ்ட்! - ஷாருக் ஸ்டேட்மென்ட்

இந்தியாவிலேயே தமிழர்கள்தான் பெஸ்ட்!  - ஷாருக் ஸ்டேட்மென்ட்

செய்திகள் 20-Jun-2013 9:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஷாருக் கான் - தீபிகா படுகோனே நடிப்பில் ரிலீஸிற்குக் காத்திருக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ஹிந்தித் திரைப்படத்தின் டிரைலர் வெளியானபோது, ஏகப்பட்ட கண்டனங்கள் இணையதளம் முழுக்க வளைய வந்தன. அதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையிலும், தமிழர்களை குஷிப்படுத்தும் (எல்லாம் புரமோஷன்தாம்ப்பா! ) வகையிலும் தமிழ் வாரஇதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் ஷாரூக்.

‘‘என் பட டிரைலரில் நான் தமிழர்களை கிண்டல் செய்திருப்பதாக சொல்வது தேவையில்லாத குற்றச்சாட்டு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் தமிழர்களைப் பற்றிச் சொன்னால் இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் கோபித்துக்கொள்வார்கள். டெக்னாலஜியைப் பொறுத்தவரை இந்தியாவில் தமிழர்கள்தான் டாப். என்னுடைய ‘ஸ்வதேஸ்’ படத்திற்காக அமெரிக்காவின் நாசாவுக்குச் சென்றபோது, அங்கே இருந்தவர்களில் 75% பேர் தமிழர்கள்தான். வெள்ளைக்காரர்களை தேடிப்பிடித்து ஃபிரேமுக்குள் கொண்டு வருதற்குள் படாதபாடு பட்டுவிட்டோம்!’’ என தன் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

பிறகென்ன... ‘சென்னை எக்ஸ்பிரஸ்’க்கு கிரீன் சிக்னல் கொடுக்க இந்த ஸ்டேட்மென்ட் ஒண்ணு போதாதா? போலாம் ரைட்...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹேப்பி நியூ இயர் - 'நான்சென்ஸ் கி நைட்' வீடியோ சாங்


;