‘வில்லா’ டீஸருக்குள் எஸ்.ஜே.சூர்யா!

‘வில்லா’ டீஸருக்குள் எஸ்.ஜே.சூர்யா!

செய்திகள் 19-Jun-2013 6:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பீட்சா’வின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘வில்லா’வை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம். அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் இப்படத்தை புதுமுகம் தீபன் சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் 1 நிமிட டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அந்த டீஸரின் ஆரம்பக் காட்சிகளில் மங்கலான ஒரு உருவம் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா போல் தோற்றமளிக்க, இந்த சந்தேகத்தை டைரக்டரிடம் கேட்டபோது, ‘‘அந்த மங்கலான உருவம் அவர்தான். அவர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்’’ என அதன் ரகசியத்தை உடைத்தார்.

எப்படியெல்லாம் எதிர்பார்ப்பை கிளப்புறாங்கப்பா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;