சினிமாவை ஆக்கிரமிக்கும் ‘எஸ்எம்எஸ்’ ராஜேஷ் அன்ட் கோ!

சினிமாவை ஆக்கிரமிக்கும் ‘எஸ்எம்எஸ்’ ராஜேஷ் அன்ட் கோ!

செய்திகள் 19-Jun-2013 1:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’ படம் மூலம் தமிழ்சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என இவரின் அடுத்த இரண்டு படங்களும் பெரிய அளவில் ஹிட்டாக, ‘ஹாட்ரிக்’ ஹிட் அடித்த இயக்குனர் என்ற பெயரைப் பெற்றார். தற்போது கார்த்தியை வைத்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது ஒருபுறமிருக்க, இவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் அடுத்தடுத்த இயக்குனர்களாக மாறி வருகிறார்கள்.

ராஜேஷோடு எஸ்.ஏ.சி.யிடம் உதவி இயக்குனராக இருந்தவரும், ராஜேஷின் மூன்று படங்களிலுமே உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவருமான ஐ.ராஜசேகரன் சிவா & சந்தானம் காமெடிக் கூட்டணியில் ‘யா.. யா...’ எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடந்து முடிந்தநிலையில், விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறதாம்.

அதேபோல், ராஜேஷின் இன்னொரு உதவியாளரான பொன்ராம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிந்து மாதவி, சூரி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தனது குரு ராஜேஷையே வசனம் எழுத வைத்திருக்கிறார். இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறது.

தவிர, ராஜேஷின் மற்றொரு உதவி இயக்குனரான ஜெகதீஷ், உதயநிதி ஸ்டாலினை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படம் முடிந்தபிறகு, இப்படத்தின் வேலைகள் தொடங்குமாம். இப்படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸே தயாரிக்கிறதாம்.

இவர்களைத்தவிர ராஜேஷின் இன்னும் இரண்டு உதவியாளர்களும் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;