விரைவில் ‘கலகலப்பு 2’!

விரைவில் ‘கலகலப்பு 2’!

செய்திகள் 19-Jun-2013 12:33 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர், நடிகர் என மாறி மாறி இரட்டை குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுந்தர்.சி ‘இனி இயக்கம் மட்டுமே’ என முடிவெடுத்து களமிறங்கிய படம் 2012ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகிய ‘கலகலப்பு’ திரைப்படம். இப்படத்தில் விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தையும் எடுக்கலாம் என்ற யோசனை சுந்தர்.சிக்கு அப்போதே இருந்தது. ஆனால், அதன் பின்னர் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘மதகஜராஜா’ என அடுத்தடுத்து பிஸியாகிவிட்டார்.

தற்போது, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோல், ‘மதகஜராஜாவும்’ கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இதனால், இப்படத்தைத் தொடர்ந்து ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்திற்கான வேலையில் சுந்தர்.சி இறங்குவார் எனத் தெரிகிறது. முதல் பாகத்திற்கு இசையமைத்த விஜய் எபினேஸரை மட்டும் இப்போதைக்கு முடிவு செய்து வைத்திருக்கிறார்களாம். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று சுந்தர்.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;