‘நேரம்’ ஜோடிக்கு நல்ல நேரம்!

‘நேரம்’ ஜோடிக்கு நல்ல நேரம்!

செய்திகள் 18-Jun-2013 4:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நேரம்’ படத்தில் ஜோடியாக நடித்த நிவின் பௌலி, நஸ்ரியா நசீம் ராசியான ஜோடியாகி விட்டது போலும். இவர்கள் முதன் முதலாக இணைந்து கலக்கிய ‘யூவ்’ ஆல்பம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, அதன் பிறகு இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த ‘நேரம்’ படமும் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நல்ல வசூல் செய்ய, மீண்டும் இந்த ஜோடி ஒரு மலையாள படத்தில் இணைகிறது.

இந்த படத்தை ‘மலர்வாடி ஆர்ட்ஸ்’, ‘தட்டத்தின் மறையத்து’ போன்ற மலையாள படங்களை இயக்கிய வினீத் சீனிவாசனுடன் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிய லிஜோ இயக்குகிறார். ‘மலர்வாடி ஆர்ட்ஸ்’ மற்றும் ‘தட்டத்தின் மறையத்து’ படங்களில் ஹீரோவாக நடித்தவர் நிவின் பௌலிதான் என்பதும், இப்போது அவர் கைவசம் ஐந்து மலையாள படங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக - டிரைலர்


;