இசையமைப்பாளர் தமனின் சாதனை!

இசையமைப்பாளர் தமனின் சாதனை!

செய்திகள் 18-Jun-2013 5:39 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

2003ல் வெளியான இயக்குனர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் டிரம்ஸ் வாசிக்கும் ‘அமுல்’ பேபியாக அறிமுகமானவர் தமன். நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் தமனுக்கு நாட்டம் என்னவோ இசைத்துறையில்தான் இருந்தது. அந்த தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் 2008ல் ‘சிந்தனை செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதே வருடத்தில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பீபட்சம்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் இசையமைப்பாளராக அறிமுகமானார் தமன். இதன் மூலம் தமிழ், தெலுங்கு என இரட்டைக் குதிரைகளிலும் மாறி மாறி பயணம் செய்து வந்தார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் தொய்வாக சென்றுகொண்டிருந்த தமனின் இசைப்பயணத்தை, ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘கிக்’ படம் கொஞ்சம் தூக்கி நிறுத்தியது. இப்படம் தமிழில் ‘தில்லாங்கடி’ எனும் பெயரில் வெளிவந்து, கோலிவுட்டிலும் தமன் இசைக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன் பின்பு வரிசையாக தமிழிலும் தெலுங்கிலும் அவ்வப்போது ‘ஹிட்’ கொடுத்து நம்பிக்கையான இசையமைப்பாளராக வலம் வந்தார் தமன்.

அதன் பிறகு, மகேஷ் பாபு நடித்து ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் வெளிவந்த ‘தூக்குடு’வின் வெற்றி, தமனை தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்கள் வரிசையில் அமர்த்தியது. தற்போது மீண்டும் இதே வெற்றிக் கூட்டணி கைகோர்த்திருக்கும் ‘ஆகடு’ என்ற படத்தில் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் சேர்த்து மிகக்குறுகிய காலகட்டத்தில் 50 படங்களுக்கு இசையமைத்தவர் என்ற சாதனையை செய்திருக்கிறார் தமன்.

தற்போது தமிழில் வாலு, டீல், ஆல் இன் ஆல் அழகுராஜா, பட்டத்து யானை ஆகிய படங்களிலும், தெலுங்கில் ராமையா வஸ்தாவய்யா, ரேஸ் குர்ரம், ராம்சரண்& கொரட்டல சிவா இணையும் பெயரிடப்படாத புதிய படம், ஆகடு என பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் இந்த இளம் இசைச் சக்கரவர்த்தி!

‘வெல்டன் தமன்... கீப் ராக்கிங்!’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;