ஜூன் 27-ல் மரியான்!

ஜூன் 27-ல் மரியான்!

செய்திகள் 18-Jun-2013 3:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி நடித்துள்ள ‘மரியான்’ படம் 21-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் படத்திற்கு சென்சார் சர்டிஃபிகட் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இப்போது படம் தணிக்கை செய்யப்பட்டு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மரியானை 21-ஆம் தேதிக்கு பதிலாக வருகிற 27-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தின் கிளைமேக்ஸில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதால் தான் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதாம். எது எப்படியோ… ரசிகர்களே, இன்னும் ஒரு வாரம்தான், மரியானை கொண்டாட காத்திருங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;