மகதி திறந்து வைத்த ஆடையகம்!

மகதி திறந்து வைத்த ஆடையகம்!

செய்திகள் 18-Jun-2013 11:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல பின்னணிப் பாடகி மகதி சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள ராகா பொட்டிக்கை திறந்து வைத்தார். இதன் உரிமையாளர் காட்வின், அடிப்படையில் ஒரு இண்டீரியர் டிசைனர். இவருக்கு இசையிலும் ஆர்வமுண்டு. சென்னை சாலிகிராமத்தில் ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றை வைத்திருக்கும் இவர் திரைப்படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார்.<br/><br/> மும்பை, அஹமதாபாத், டெல்லி போன்ற நகரங்களுக்கு அடிக்கடி பயணம் செய்யும் காட்வின், அங்கு அறிமுகப்படுத்தப்படும் சிறந்த வடிவமைப்புடைய ஆடைகளை பார்த்து, இதுபோன்ற ஆடைகளை ஏன் உடனுக்குடன் சென்னைக்கு வரவழைத்து இங்குள்ள பெண்களிடம் அறிமுகப்படுத்தக்கூடாது என்று தோன்றியதன் விளைவாக உருவாக்கப்பட்ட ஷோரூம் தான் இந்த ராகா பொட்டிக். இங்கு பெண்களுக்கான அனைத்து ரக நவநாகரீக ஆடைகளும் கிடைக்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;