அமீரையும், சல்மானையும் முந்திய ரன்பீர் கபூர்!

அமீரையும், சல்மானையும் முந்திய ரன்பீர் கபூர்!

செய்திகள் 17-Jun-2013 3:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட் சரித்திரத்திலேயே இதுவரை அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலில் இருப்பது அமீர்கான் நடித்த ‘ 3 இடியட்ஸ்’ திரைப்படமும்( 202 கோடி), இரண்டாவது இடத்தில் இருப்பது சல்மான்கான் நடித்த 'ஏக்தா டைகர்' திரைப்படமும் (199 கோடி ) தான். ஆனால் இந்த படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் வகையில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்த ‘யே ஜவானி ஹாய் தீவானி‘ படம் வெளியாகிய பதினைந்து நாட்களிலேயே 155 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வரும் ஒரு சில நாட்களிலேயே முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர் ஹிந்தி திரையுலக வியாபார பிரமுகர்கள். ‘யே ஜவானி ஹாய் தீவானி’ படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க, படத்தை அயன் முகர்ஜி இயக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;