‘அன்னக்கொடி’க்கு யு/ஏ சான்றிதழ்!

‘அன்னக்கொடி’க்கு யு/ஏ சான்றிதழ்!

செய்திகள் 17-Jun-2013 12:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதிராஜா, தனது ‘மனோஜ் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘அன்னக்கொடி’. இப்படத்தில் புதுமுகம் லக்‌ஷ்மன் நாராயண் – கார்த்திகா ஜோடியாக நடித்திருக்க, பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா முக்கிய வேடம் ஒறில் நடித்திருக்கிறார். பாரதிராஜா, தனது வழக்கமான பாணியில் கிராமியமும், அழகியலும் கலந்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார்.
பாரதிராஜாவும், ஜீ.வி.பிர்காஷ் குமாரும் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்போது படத்தின் வேலைகளெல்லாம் முடிந்து படம் விரைவில் திரைக்கு வரவிருக்க, இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். பாரதிராஜா இயக்கும் படம் என்றால் அதற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அல்லவா? அந்த எதிர்பார்ப்பு இந்த படத்திற்கும் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோ 2 - மோஷன் போஸ்டர்


;