அஜித்துடன் சூசாகுமார்!

அஜித்துடன் சூசாகுமார்!

செய்திகள் 17-Jun-2013 5:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்தவர் சூசா குமார். இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் ஸ்கோர் பண்ணியிருந்தாலும், சூசா குமாருக்கும் பேசும்படியான பாத்திரம் அமைந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சூசா குமாருக்கு ‘தல’ அஜித் நடிக்கும் படத்தில் நடிக்கும் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் பெயரிடப்படாத படத்தைத் தொடர்ந்து அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, அஜித்தின் சகோதரராக நடிக்கும் விதார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார் சூசா குமார். அஜித்துடன் சந்தானமும் நடிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;