மகனை துயரத்தில் ஆழ்த்திய தாய்!

மகனை துயரத்தில் ஆழ்த்திய தாய்!

செய்திகள் 17-Jun-2013 11:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எங்கேயும் எப்போதும்’, ‘சேவற்கொடி’ போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர் சத்யா. இவரது இசை அமைப்பில் சென்ற 14—ஆம் தேதி திரைக்கு வந்திருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்கும் இவர்தான இசை அமைத்திருக்கிறார்.

தொடர்ந்து பல வெற்றிகளை கொடுத்து வரும் சத்யா இசை அமைத்திருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்க, அந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாத படி, நேற்று மாலை சத்யாவின் தயாரை ஆண்டவன் அழைத்துக்கொண்டார்.

தாயாரை விட்டுப் பிரிந்து, துயரத்தில் இருக்கும் சத்யாவுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது தாயாரின் ஆத்மா சாந்தி அடைய ‘டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு - டிரைலர்


;