ஆங்கில படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்!

ஆங்கில படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்!

செய்திகள் 17-Jun-2013 11:11 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கிய பி.வாசு அடுத்து ஒரு ஆங்கில படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, ‘’ஆங்கில படம் இயக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. பிரபல ஹீரோயின் ஒருவரை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தேன். அப்போதுதான் அமெரிக்க தமிழரான ராஜ்திருச்செல்வன் என்பவருடன் அறிமுகம் கிடைத்தது.

அவர் இரண்டு ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கி, தயாரித்தவர். அவர் ஒரு கதையை உருவாக்கி வைத்திருக்கிறார். பூமியை மனிதர்கள் தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார்கள். இப்படி தொடர்ந்து காயப்படுத்தினால் பூமி என்ன முடிவெடுக்கும் என்ற விழிப்புணர்வு கருத்தை கூறும் கதை. என்னிடம் இந்த கதையை இயக்கி தருமாரு கேட்டார் ராஜ் திருச்செல்வன்.

எனக்கும் கதை பிடித்திருந்ததால் அதில் சில மாற்றங்கள் செய்து இயக்க இருக்கிறேன், இந்த படத்திற்கு ‘கரி இன் லவ்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இப்ப்படத்தில் ஹாலிவுட் மற்றும் இந்திய நடிகர் - நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். படப்பிடிப்பு விரைவில் துவங்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;