கேரளாவில் மதயானைக்கூட்டம்!

கேரளாவில் மதயானைக்கூட்டம்!

செய்திகள் 17-Jun-2013 12:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தலைவா’, ‘ராஜா ராணி’, ‘ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை’ 'அன்னகொடி' என அடுத்தடுத்து திரைக்கு வரவிருக்கும் பிரம்மாண்ட படங்கள், பின்னணிப் பாடகி சைந்தவியுடனான திருமணம் என படு பிசியாக இயங்கி வரும் இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார், தனது சொந்த பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் வேலைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி படத்தின் பெரும்பாலான வேலைகளை முடித்து விட்டார்.

விக்ரம் சுகுமார் இயக்கத்தில், கதிர், ஓவியா முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளா மற்றும் தேனியில் நடைபெறவிருக்கிறது. வருகிற 27-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் ஜீ.வி.பிரகாஷ்குமார் – சைந்தவி திருமணம் முடிந்த கையோடு ‘மதயானைக் கூட்டம்’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் ஜீ.வி.பிரகாஷ்குமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;