மரியானுக்கு வழிவிட்ட அம்பிகாபதி!

மரியானுக்கு வழிவிட்ட  அம்பிகாபதி!

செய்திகள் 15-Jun-2013 11:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் தயாரிப்பில், பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி மேனன் நடித்திருக்கும் ‘மரியான்’ படத்தையும், தனுஷ், சோனம் கபூர் ஜோடியாக நடித்து, ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கும் ‘ரான்ஜனா’ ஹிந்தி படத்தின் தமிழ் மொழிமாற்று படமான ‘அம்பிகாபதி’ படத்தையும் ஜீன் 21—ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஒரே நாளில் ஒரு ஹீரோ நடித்த இரண்டு பட்ங்கள் வெளியாகி மோத இருப்பது குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் ‘அம்பிகாபதி’ படத்தின் வெளியீட்டை கொஞ்சம் தள்ளி வைத்திருக்கின்றனர்.

‘மரியான்’ படம் வெளியாகி ஒரு சில வாரங்கள் கழித்து ‘அம்பிகாபதி’யை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். தனுஷ் நடித்திருக்கும் இந்த படங்களில் எந்த படம் முதலிடத்தை பிடிக்கும் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். காத்திருப்போம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;