பாம்பு அல்ல; பச்சோந்தி! - நயன்தாரா

பாம்பு அல்ல; பச்சோந்தி! - நயன்தாரா

செய்திகள் 15-Jun-2013 12:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பொதுவாக பெண்கள் பல்லி, கரப்பான் பூச்சி போன்றவற்றை பார்த்தாலே அலறி அடித்து ஓடி விடுவார்கள். ஆனால் இந்த விஷயத்திலும் கூட நடிகை நயன்தாரா கொஞ்சம் தைரியமானவர் போலும். இல்லையென்றால் படப்பிடிப்பிற்காக சென்ற இடத்தில் தன் கண்ணில் பட்ட ஒரு பச்சோந்தியை பிடித்து விளையாடி கொண்டிருப்பாரா என்ன? சந்தேகம் வேண்டாம், இந்த சம்பவம் நடந்தது கோவையில் நடந்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில்தான்.

எந்த பயமும் இல்லாமல் நயன்தாரா பச்சோந்தியை பிடித்து அதற்கு பாபு என்று பெயர் வைத்தும், விளையாடுவதை பார்த்து வியந்துபோயினர் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின் உட்பட படப்பிடிப்புக் குழுவினர்! நயன்தாரா பச்சோந்தியை பிடித்து அதற்கு ‘பாபு’ என்று பெயர் வைத்து விளையாடிய விளையாட்டை சிலர் ‘நயன்தாரா பாம்பை பிடித்து விளையாடினார்’ என்று செய்திகள் போட்டு மகிழ்ந்தது இன்னொரு தமாஷான மேட்டர்!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;