மௌனம் கலைத்த விஜய்!

  மௌனம் கலைத்த விஜய்!

செய்திகள் 15-Jun-2013 2:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற 22-அம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள். இந்த பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர் மன்றம் சார்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கவிருந்தனர். இதற்கான விழா, கடந்த 8—ஆம் தேதி சென்னை, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடக்கவிருந்தது, ஆனால் இந்த விழாவை கல்லூரி நிர்வாகத்தினர் திடீரென்று ரத்து செய்தனர். இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத இருந்த விஜய் தற்போது தனது மௌனத்தை கலைத்தவாறு,

‘’எனக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு அதே உணர்வு உள்ளது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து, ரத்ததானம் செய்வது என்று பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். அதுபோல் என் ரசிகர்களும் பிறருக்கு உதவி செய்து வருகிறார்கள். என் பிறந்தநாளில் நான் மட்டு மின்றி ஏழைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

அதனால் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க நினைத்தேன். ஆனால் நான் இந்த நல்ல காரியங்கள் செய்வது பிடிக்காமல் சிலர் இது அரசியலகட்சி விழா என்று கூறி அந்த விழாவை நடத்தவிடாமல் தடுத்திருக்கிறார்கள். நாங்கள் எவ்வளவோ உண்மையை எடுத்து கூறியும் விழா நடத்த அனுமதி தரவில்லை. இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

நடிப்பதுதான் என் தொழில். மற்றபடி அரசியல் பற்றி யோசிக்க கூட நேர்மில்லாமல் சினிமாவில் உழைத்து வருகிறேன். அந்த விழா நடந்திருந்தால் நிறைய ஏழைகள் சிரித்திருப்பார்கள். ஆனால் அந்த ஏழைகளை சிரிக்க விடாமல் தடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி! நான் வேறு என்ன கூற முடியும்’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;