மீண்டும் சந்தானம் - சிவா கூட்டணி!

மீண்டும் சந்தானம் - சிவா கூட்டணி!

செய்திகள் 14-Jun-2013 5:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி, வசூலில் கல்லா கட்டிய படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இந்த படத்தை இயக்கிய மணிகண்டன் தனது அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி விட்டார். இப்படத்தையும் காமெடியை மையமாக வைத்துதான் இயக்க போகிறாராம் மணிகண்டன். ‘தினசரி 4 காட்சிகள்’ என்று பெயர் வைத்திருக்கும் இப்படத்தில் சந்தானத்துடன் ‘மிர்ச்சி’ சிவாவும் நடிக்க இருக்கிறார்.

ஏற்கெனவே இவர்கள் இணைந்து நடித்த ‘கலகலப்பு’, ‘தில்லு முல்லு’ படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘தினசரி 4 காட்சிகள்’ படத்தை பி.எல்.தேனப்பன் தயாரிக்க, கதாநாயகிகள், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கன்னா பின்னா - டிரைலர் 2


;