அமீரின் பேரன்பு கொண்ட பெரியோர்களே…

அமீரின் பேரன்பு கொண்ட பெரியோர்களே…

செய்திகள் 14-Jun-2013 5:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'யோகி' படத்தின் மூலம் தன்னை ஒரு ஹீரோவாகவும் அடையாளம் காட்டிய இயக்குனர் அமீர், 'யுத்தம் செய்' படத்தில ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ’ஆதிபகவன்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த அமீர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே”. இப்படத்தை சந்திரன் என்பவர் இயக்க, . உதவி இயக்குநரான ஆதம் பாவா தயாரிக்கிறார். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தில் பரத்தின் ஜோடியாக நடித்திருக்கும் மிருத்திகா அமீருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் துவங்க இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நகர்வலம் - டீசர்


;