பணமோசடி! காவல் நிலையத்தில் புகார் அளித்த பிரபு சாலமன்!

பணமோசடி! காவல் நிலையத்தில் புகார் அளித்த பிரபு சாலமன்!

செய்திகள் 14-Jun-2013 12:40 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘’நான் பிரபு சாலமன் பேசுகிறேன், என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். மீதி மருத்துவ செலவிற்காக நீங்களும் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள். பணத்தை வங்கி கணக்கில் போட்டால் போதும்’’ என்று யாரோ ஒருவர் பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு ஃபோன் செய்து, இயக்குனர் பிரபு சாலமன் பேசுவது போல் பேச, இது உண்மை என நினைத்து நிறைய பேர் அந்த வங்கி கணக்கில் பணத்தை போட வைத்து ஏமாற்றி உள்ளார்.

இது குறித்து அறிந்த இயக்குனர் பிரபு சாலமன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘’ என் பெயரை தவறாக பயன்படுத்தி யாரோ பணம் கேட்டு ஏமாற்றி வருகிறார். அதை யாரும் நம்ப வேண்டாம். இது போல் தயாரிப்பாளர் காஜா மொய்தீன், ‘வேதம் புதிது’ கண்ணன், நடிகர் சாந்தனு ஆகியோரது பெயரையும் தவறாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்தான் என் பெயரை சொல்லியும் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இது சம்பந்தமாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;