மம்முட்டியை பின்னுக்குத் தள்ளிய நஸ்ரியா நசீம்!

மம்முட்டியை பின்னுக்குத் தள்ளிய நஸ்ரியா நசீம்!

செய்திகள் 14-Jun-2013 12:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாள படவுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், மெகாஸ்டார் மம்முட்டி.. இவர்களது ஃபேஸ்புக் பக்கங்களில் அதிக ‘லைக்ஸ்’ பெற்று எப்போதும் முன்னிலையில் இருப்பவர் மோகன்லால்தான். இரண்டாவது இடத்தில் மம்முட்டியும் இருப்பார். ஆனால, ‘நேரம்’ படம் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாகி, சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்க, இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நஸ்ரியா நசீம், மம்முட்டியை பின்னுக்குத் தள்ளி ஃபேஸ்புக்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார்.

அதாவது நஸ்ரியாவுக்கு 6 லட்சத்திற்கும் மேல் ‘லைக்ஸ்’ கிடைத்து இன்னும் விறுவிறுவென எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்க, மம்முட்டி பெற்றிருக்கும் ‘லைக்ஸ்’ 5,96,288 மட்டும்தான். மோகன்லாலுக்கு 7,80,954 ‘லைக்ஸ்’ கிடைத்து எப்போதும்போல முதல் இடத்தில் இருக்கிறார். நஸ்ரியா நசீம் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போது, மம்முட்டியின் மகளாக இரண்டு படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பால்யகால சகி


;