தள்ளிப் போகும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி!

தள்ளிப் போகும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி!

செய்திகள் 14-Jun-2013 11:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த படம் இன்னும் துவங்கிய பாடில்லை! தனுஷின ‘மரியான்’ படம் வருகிற 21-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், தனுஷ் ஹிந்தியில் நடித்திருக்கும் ‘ரான்ஜனா’ படத்தின் தமிழ் பதிப்பான ‘அம்பிகாபதி’யும் அதே தினம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படங்களை தொடர்ந்து ‘நையாண்டி’ என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்து வரும் தனுஷ், ஆகஸ்ட் மாதம் முதல் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க இக்கிறார். இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாரம் தனுஷ்.

இது தவிர ‘ரான்ஜனா’ படத்தின் இயக்குனர் ஆனந்தராய் அடுத்து இயக்கும் ஹிந்தி படத்திலும் நடிக்க் இருக்கிறார் தனுஷ். இதனால் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி படம் மேலும் தாமதமாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;