விஜய்சேதுபதி படத்தில் ஸ்னேகா!

விஜய்சேதுபதி படத்தில் ஸ்னேகா!

செய்திகள் 13-Jun-2013 10:45 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ என பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’ இப்படத்தை மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எம்.ஆர். கணேஷ் தயாரிக்கிறார். இதில் ஜெயபிரகாஷ் பண்ணையராக நடிக்க, அவரது கார் டிரைவராக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்து வருகிறார். எஸ்.யு.கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் பண்ணையாரின் மகள் வேடத்தில் நடிப்பதற்காக நிறைய பேரை பரிசீலித்து வந்த நிலையில் இப்போது நடிகை ஸ்னேகா தேர்வாகி அந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியுடன் ஸ்னேகா நடிக்கும் முதல் படம் இது என்பது குப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்


;