சூர்யாவுக்கு ஜோடி த்ரிஷா?

சூர்யாவுக்கு ஜோடி த்ரிஷா?

செய்திகள் 12-Jun-2013 12:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘துருவநட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்புகள் விரைவில துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் சிம்ரன், பார்த்திபன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் நிலையில் ‘பில்லா 2’ படத்தில் நடித்த சுதன்ஷு பாண்டேயும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் 12 முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறதாம்.

இந்த பாத்திரங்களில் நடிப்பதற்கான நடிகர் - நடிகைகளை தேர்வும் நடந்து வரும் நிலையில் சூர்யாவுடன் ஜோடியாக நடிப்பதற்கான நடிகையின் தேர்வும் நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா அல்லது அமலா பால் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;