‘கோச்சடையான்’ எப்போது?

‘கோச்சடையான்’ எப்போது?

செய்திகள் 12-Jun-2013 12:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது. இந்திய சினிமாவிலேயே முதன் முதலாக மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்திருக்க, சரத்குமார், ஷோபனா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் குறித்து, ‘’நீங்கள் ஆவலாய் எதிர்பார்க்கும் ‘கோச்சடையான்’ படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகவிருக்கிறது, வரவேற்க தயாராகுங்கள்’’ என்று டுவீட் செய்திருக்கிறர் சௌந்தர்யா ரஜினிகாந்த். படம் ஜூலை மாதம் கடைசியில் திரைக்கு வருமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி


;