மனோதத்துவ டாக்டர் வாலிபராஜா!

மனோதத்துவ டாக்டர் வாலிபராஜா!

செய்திகள் 11-Jun-2013 10:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் சந்தானத்திற்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இந்த படத்தில் நடித்த சந்தானமும், சேதுவும் மீண்டும் இணைந்து ‘வாலிபராஜா’ என்ற படத்தில் நடிக்கிறார்கள். ‘வாங்ஸ் விஷன்’ நிறுவனம் சார்பில் ஹெச். முரளி தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த விஷாகா சிங் ஒரு கதாநாயகியாக நடிக்க, இன்னொரு கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் நடிக்க இருக்கிறார்.
காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் சந்தானம் வாலிபராஜா எனும் மனோதத்துவ டாக்டராக நடிக்க, இப்படத்தை ‘கோ’, ‘மாற்றான்’ போன்ற படங்களில கே.வி.ஆனந்த் கூட அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார். இப்படத்தில் படப்பிடிப்பு வருகிற 19-ஆம் தேதி துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;