‘ஜெயம்’ ரவியை நிமிர்ந்து நிற்க வைக்கும் படம்!

‘ஜெயம்’ ரவியை நிமிர்ந்து நிற்க வைக்கும் படம்!

செய்திகள் 10-Jun-2013 12:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆதி பகவன்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி நடித்து வரும் படம் ‘நிமிர்ந்து நில்’. ‘போராளி’ படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கும் இப்படத்தில் ‘ஜெயம்’ ரவி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ‘உன்னை நீ சரி செய்து கொள், உலகம் தானாக சரியாகி விடும்’ என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இதில், நூறு சதவிகிதம் நல்லவனாக வாழ நினைக்கும் ஒருவனை இந்த சமூகம் அப்படி வாழவிடாமல் துரத்துகிறது.

அதனால் வெகுண்டெழுந்த அந்த இளைஞன் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள்தான் படம் இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவியின் ஜோடியாக அமலா பால் நடிக்க, , சரத்குமார் நேர்மையான சி.பி.ஐ. அதிகாரியாக நடிக்க, 'நீயா நானா' புகழ் கோபிநாத்தும் ஒரு வேடத்தில் நடிக்கிறார்.

அதிரடி சண்டை காட்சிகளும், திருப்பங்களும் நிறைந்த படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘கும்கி’ புகழ் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ‘வாசன் விஷுவல் வென்ஞர்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக, தெலுங்கில் ”நான் ஈ’ புகழ் நானி நடிக்கிறார். ‘ஜெயம்’ ரவி நடித்த ‘ஆதி பகவன், எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் ‘நிமிர்ந்து நில்’ ‘ஜெயம்’ ரவியை நிமிர்ந்து நிற்க வைக்கும் என்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;