கமலின் உத்தம வில்லன்!

கமலின் உத்தம வில்லன்!

செய்திகள் 10-Jun-2013 11:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘விஸ்வரூபம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் வேலைகளில் படு பிஸியாக இயங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் லிங்குசாமி தயாரிக்கும் படத்தின் வேலைகளில் இறங்கவிருக்கிறார் கமல்ஹாசன். லிங்குசாமி தயாரிப்பில் ‘உத்தம வில்லன்’ என்ற பெயரில், பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் கதை, வசனத்தை கிரேஸி மோகன் எழுத, கமல்ஹாசன் நடித்து, இயக்க இருக்கிறார்.

இப்படத்தில் காமெடி கலந்த ஒரு வில்லன் பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இப்படம் லிங்குசாமி தயாரித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம் என்ற பெருமையையும் பெறுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;