வாழ்த்துக்கள் விக்ரமன்!

வாழ்த்துக்கள் விக்ரமன்!

செய்திகள் 10-Jun-2013 10:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம். 2013- 2015 ஆம் ஆண்டிற்கான சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று சென்னை, வடபழனியிலுள்ள இசை அமைப்பாளர் சங்கத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் இயக்குனர் விசு தலைமையில் ஒரு அணியும், .இயக்குனர் விக்ரமன் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டனர்.

காலை முதல் மாலை வரை நடந்த ஓட்டுப்பதிவில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஓட்டுப் போட்டனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும் இரவு ஓட்டு எண்ணிக்கை துவங்க, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விசு - விக்ரமன் ஆகியோர்களில் விக்ரமன் விசுவை விட 155 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றதாக அறிவித்தனர். அதாவது விக்ரமனுக்கு 717 ஓட்டுகளும், விசுவிற்கு 562 ஓட்டுகளும் கிடைத்த
து. மற்ற நிர்வாகிகள் யார் யார் என்பது இன்று தெரிய வரும். இயக்குனர்கள் சங்க தலைவராக வெற்றிபெற்றுள்ள விக்ரமனுக்கு ‘டாப் 10 சினிமா’வின் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நினைத்தது யாரோ


;