திரைக்கதை ஆசிரியரான இசைப்புயல்!

திரைக்கதை ஆசிரியரான இசைப்புயல்!

செய்திகள் 7-Jun-2013 2:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய திரைப்பட இசையை உலகளவிலான இசை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். பல்வேறு மொழிப் படங்களுக்கு இசை அமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசை தவிர திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம் இருக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரியாத விஷயம். பல நாட்களாக ஒரு திரைக்கதை அமைப்பில் தன்னை ஈடுபடுத்தி வந்த இசைப்புயல், சமீபத்தில் அந்த திரைக்கதையை எழுதி முடித்துவிட்டாராம்.

ஆனால் இதை படமாக இயக்கும் எண்ணமெல்லாம் அவரிடம் கிடையாதாம். இந்த கதையை ஹிந்தியில் படமாக்க பல பாலிவுட் இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்களாம். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் யாருக்கு அந்த வாய்ப்பை வழங்குவார் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;