மீண்டும் காவேரி!

மீண்டும் காவேரி!

செய்திகள் 7-Jun-2013 2:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து எராளமான படங்களில் நடித்தவர் காவேரி. ‘சமுத்திரம்’, ‘புன்னகை பூவே’ போன்ற படங்களில் நடித்த காவேரி, தமிழில் கடைசியாக நடித்து வெளியாகிய படம் ‘கண்ணாடி பூக்கள்’.

இந்த படத்தைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்பட இயக்குனர் சூர்யகிரணை திருமணம் செய்து, வாழ்க்கையில் செட்டில் ஆன காவேரி தற்போது மீண்டும் நடிக்க வந்து ஒரு சில டி.வி.சீரியல்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவருக்கு இரண்டு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்க இருக்கிறார் காவேரி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;