’துப்பாக்கி’ ஹீரோவும் ‘ஈ’ நாயகியும் இணையும் படம்!

’துப்பாக்கி’ ஹீரோவும் ‘ஈ’ நாயகியும் இணையும் படம்!

செய்திகள் 7-Jun-2013 12:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ‘துப்பாக்கி’ ஹிந்தி ரீ-மேக்கில் பிசியாக இயங்கி வர, விஜய் ‘தலைவா’ படத்தின் வேலைகளை முடித்துவிட்டு, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் ‘ஜில்லா’வில் ஐக்கியமாகியிருக்கிறார். ஹிந்தி ‘துப்பாக்கி’க்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இணையும் படத்தை லண்டன் கருணாஸ் பிரம்மாண்டமான முறையில் தயாராக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாததால் அந்த வாய்ப்பு இப்போது ‘ஈ’ நாயகி சமந்தாவுக்கு கிடைத்திருக்கிறது. இவரது கால்ஷீட் டைரியும் ஃபுல்லாக இருக்க, ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் படம் என்பதால் அட்ஜெஸ்டு செய்து தேதிகளை கொடுத்திருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;