மீண்டும் ‘துள்ளல்’ நாயகன்!

மீண்டும் ‘துள்ளல்’ நாயகன்!

செய்திகள் 7-Jun-2013 11:10 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நாகார்ஜுனா, சுஷ்மிதா சென் நடிப்பில் ‘ரட்சகன்’ மற்றும் ‘ஜோடி’, ‘ஸ்டார்’ போன்ற பல காதல் கதைகளை இயக்கிய ப்ரவீன் காந்த், ஹீரோவாக நடித்து, இயக்கி, தயாரித்த படம் ‘துள்ளல்’. இயக்குனராக வெற்றி பெற்ற ப்ரவீன் காந்தால் நடிகராக சொல்லும்படியான இடத்திற்கு வரமுடியவில்லை என்றாலும், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தானே ஹீரோவாக நடித்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் தெரிவிக்க இருக்கிறார் ப்ரவீன்காந்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;