எதிர்நீச்சல் ஹீரோவுடன் ஹன்சிகா!

எதிர்நீச்சல் ஹீரோவுடன் ஹன்சிகா!

செய்திகள் 7-Jun-2013 10:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படங்கள ‘சிங்கம் 2’, ’தீயா வேலை செய்யணும் குமாரு’. இந்த படங்களத் தொடர்ந்து ஒரு சில ஸ்கிரிப்ட்களை கேட்டு வந்த ஹன்சிகா அடுத்து ஏ.ஆர்.முருகதாஸுடன் பல ஆண்டு காலம் அசோஸியேட் டைரக்டராக பணி புரிந்த திருக்குமரன் இயக்கும் படத்தில், முருகதாஸின் ஸ்க்ரிப்ட்டில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;