டி.வி.தொடரில் அமிதாப் பச்சன்!

டி.வி.தொடரில் அமிதாப் பச்சன்!

செய்திகள் 6-Jun-2013 5:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பெரிய திரையிலிருந்து சின்னத்திரையில் நடிக்க வந்த பாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் பாலிவுட்டின் ‘எவர் க்ரீன் ஹீரோ’ அமிதாப் பச்சனும் இடம் பெறுகிறார். சின்னத்திரையில் ‘கோன் பனேகா குரோர்பதி’ என்ற ஒரு நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கிய அமிதாப் இதுவரை எந்த தொடரிலும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முதலாக அமிதாப் நடிக்கும் இந்த தொடர், சோனி டி.வி.யில் ஒளிபரப்பாக இருக்கிறது. பாலிவுட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் தலைமையில் உருவாக இருக்கும் இத்தொடரின் பெயர், மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தொடர் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘ஷமிதாப்’ ஹிந்தி பட டிரைலர்


;