ஐந்து கதைகள்… ஐந்து இயக்குனர்கள்… ஐந்து சுந்தரிகள்…!

ஐந்து கதைகள்… ஐந்து இயக்குனர்கள்… ஐந்து சுந்தரிகள்…!

செய்திகள் 6-Jun-2013 12:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டை கொண்டாடி மகிழ்ந்து வரும் இவ்வேளையில், சினிமாவை கௌரவிக்கும் நோக்கத்தோடு, ஐந்து இயக்குனர்கள் இணைந்து, ஐந்து சிறுகதைகளை ஒன்றிணைத்து ’அஞ்சு சுந்தரிகள்’ என்ற பெயரில் ஒரு மலையாள படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த முயற்சியில் இறங்கியிருக்கும் அந்த ஐந்து இயக்குனர்கள் அன்வர் ரஷீத், ஆஷிக் அபு, சமீர் தாஹிர், அமல் நீரத், ஷைஜு காலித் ஆகியோர்.

மலையாள திரையுலகின் முன்னணி இளம் இயக்குனர்களான இவர்கள் ஐந்து பேரும் ஒரே காலகட்டத்தில் கொச்சியிலுள்ள மஹாராஜாஸ் கல்லூரியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஐந்து சுந்தரிகளாக காவ்யா மாதவன், இஷா ஷர்வானி, ஹனிரோஸ், அஷ்மிதா சூத்வானி, ரீனு மேத்தியூஸ் ஆகியோர் நடிக்க, கதையின் நாயகர்களாக ‘நேரம்’ படப் புகழ் நிவின் பௌலி, துல்கர் சல்மான், பிஜு மேனன், ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘அமல் நீரத் புரொடக்ஷன்ஸ்’ பேனரில் உருவாகி வரும் இப்படம் குறுகிய கால தயாரிப்பாக அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;