அபிஷேக்கின் காதலி அசின்!

அபிஷேக்கின்  காதலி அசின்!

செய்திகள் 6-Jun-2013 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று சக்சஸ் ஆன நடிகைகளில் அசின் குறிப்பிடத்தக்கவர். ஹிந்தி ‘கஜினி’ படத்தில் ஆமீர்கானுடன் கை கோர்த்து நடித்து பாலிவுட்டில் அறிமுகமான அசின் இந்த படத்தைத் தொடர்ந்து ‘லண்டன் ட்ரீம்ஸ்’, ’போல் பச்சன்’, ‘கில்லாடி786’ ஆகிய படங்களில் நடித்தார்.

இதில் சென்ற வருடம் வெளியான ‘கில்லாடி 786’ படம் படு தோல்வி அடைய, கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பட வாய்ப்பில்லாமல் இருந்த அசினுக்கு தற்போது ‘ஓ மை காட்’ படத்தை இயக்கிய உமேஷ் சுக்லா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ’போல் பச்சன்’ படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகவும், அபிஷேக் பச்சனின் சகோதரியாகவும் நடித்த அசின், உமேஷ் சுக்லா இயக்கும் படத்தில் அபிஷேக் பச்சனின் காதலியாக நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;