உதய், நயன் - காரைக்குடிக்கு பயணம்!

உதய், நயன் - காரைக்குடிக்கு பயணம்!

செய்திகள் 11-Jun-2013 12:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ போன்ற அதிரடி காமெடி படங்களின் வரிசையில் நகைச்சுவை படமாக உருவாகி வரும் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்து கலக்கி வருபவர் நயன்தாரா.

‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக கோயம்பத்தூரில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறவிருக்கிறது. இந்த படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் ம்ற்றும் பலர் கலந்துகொண்டு நடிக்க இருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;