ஹரியின் கொள்கையை மாற்றிய தயாரிப்பாளர்!

ஹரியின் கொள்கையை மாற்றிய தயாரிப்பாளர்!

செய்திகள் 5-Jun-2013 3:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கும் படம் ‘சிங்கம் 2’. இந்த படத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, விவேக், சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்க, ஹரி இயக்கியிருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் படு அமர்க்களமான முறையில் நடந்தது நினைவிருக்கலாம்.

விழாவுக்கு முன்னதாக படக்குழுவினர், பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது படத்தின் இயக்குனர் ஹரி, ‘’நான் இயக்கிய படங்களிலேயே அதிக நாட்களை எடுத்து படமாக்கிய படம் இதுதான். இதில் சர்வதேச பிரச்சனையை கையாண்டிருக்கிறோம். நான் இயக்கிய 12 படங்களில் ‘சிங்கம்’ மட்டும்தான் இரண்டாம் பாகமாக வந்துள்ளது.

‘சாமி’ படத்தை இயக்கியபோது கூட படத்தின் கடைசியில், ‘சாமியின் வேட்டை தொடரும்’ என்று போட்டிருந்தோம். ஆனால் ‘சிங்கம்’ படத்தில் ‘சிங்கத்தின் வேட்டை தொடரும்’ என்று போட்டபோதுதான், இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் நிறைய வந்தது. அந்த கேள்விகளே ‘சிங்கம் 2’ படம் உருவாக காரணமாக அமைந்தது. ஆனா ல் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்க நான் கஷ்டப்பட்டது மாதிரி வேறு எந்த படத்திற்கும் திரைக்கதை அமைக்க கஷ்டப்பட்டதில்லை. காரணம் முந்தைய சிங்கத்தின பாதிப்புகள இதில் வந்துவிடக்கூடாது என்பதுதான்.
இந்த படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருப்பதற்கு முக்கிய காரணம் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.லக்‌ஷ்மன் குமார் அவர்கள்தான். அவர் ரொம்பவும் நல்லவர். செலவுக்கு அஞ்சாதவர். ஆனால் நானோ செலவுகள் பற்றி ரொம்பவும் கவலைப்படுபவன். அப்படிப்பட்ட என்னை படத்திற்கான லொகேஷன்களை பார்க்கவே பல நாடுகளுக்கு அழைத்து சென்றார், என் கொள்கைகளை மீறி நிறைய செலவு செய்ய வைத்தார். அவரது நம்பிக்கை கண்டிப்பாக ஜெயிக்கும்’’ என்று உற்சாகம் பொங்க பேசினார் ஹரி.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ப்ரியன் ‘சிங்கம் 2’ குறித்து பேசும்போது, ‘’இந்த படத்திற்கு தயாரிப்பாளர் கேட்டதையெல்லாம் கொடுத்தார். வெளிநாடுகளில் படப்பிடிப்பு, கப்பல், ஹெலிகாப்டர் என்று செலவை பற்றி கவலைப்படாமல் அவர் செய்து கொடுத்த உதவிகளால்தான் எங்களால் இப்படத்தை பெரிய அளவில் படமாக்க முடிந்தது’’ என்று பெருமையோடும் அடக்கத்துடனும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அனைவரது உற்சாகப் பேச்சும் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்பதற்கு முன்னோட்டமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;