சந்தோஷ் சிவன் படத்தில் அரவிந்த சாமி!

சந்தோஷ் சிவன் படத்தில் அரவிந்த சாமி!

செய்திகள் 5-Jun-2013 12:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'உருமி’ படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் சிவன் இயக்கி வரும் தமிழ்ப் படம் ‘இனம்’. இப்படம் ‘சிலோன்’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியாக இருக்கிறது. இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட எட்டு அனாதை குழந்தைகளின் வாழ்வியலை சித்தரிக்கும் இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் ட்ரைலரை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த ட்ரைலருக்கு நடிகர் அரவிந்த சாமி பின்னணி குரல் கொடுத்திருக்க, விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் தமிழில் ஏற்கெனவே இயக்கிய ‘மல்லி’, ‘டெரரிஸ்ட்’ போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படமும் இடம்பெறும் என்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;