இசையமைப்பாளரானார் 'டிரம்ஸ்' சிவமணி!

இசையமைப்பாளரானார் ‘டிரம்ஸ்’ சிவமணி!

செய்திகள் 5-Jun-2013 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விக்ரம் நடித்த 'கும்கி' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் தற்போது மூன்று படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் 'இவன் வேற மாதிரி', 'சிகரம் தொடு' படங்களை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்க கமிட் ஆகியுள்ள படம் 'அரிமா நம்பி'.

இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அசோசியேட் இயக்குனர் ஆனந்த சங்கர் இயக்க, ‘கலைப்புலி’ எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஜோடியாக நடிக்க இருப்பவர் ‘எதிர்நீச்சல்’ புகழ் ப்ரியா ஆனந்த். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, இதுவரை ஸ்டேஜ் ஷோக்களில் கலக்கி வந்த ‘ட்ரம்ஸ்’ சிவமணி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

’அரிமா நம்பி'' முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும்’ என்கிறார் இயக்குனர் ஆனந்த சங்கர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் கிப்ட் சாங் வீடியோ


;