விக்ரமனுக்கு பாராட்டு!

விக்ரமனுக்கு பாராட்டு!

செய்திகள் 4-Jun-2013 5:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'அபிஷேக் ஃபிலிம்ஸ்’ படநிறுவனம் சார்பாக ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து தயாரிக்க, விக்ரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நினைத்தது யாரோ’. இந்த படத்தின் இசை வெளியீட்டு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இவ்விழாவில் கலந்துகொண்டு ஏவி.எம்.சரவணன் பேசும்போது, ‘’தயாரிப்பாளர்களுக்கு பிடித்த இயக்குனர் விக்ரமன்.வழக்கமாக தயாரிப்பாளர்கள்தான் இயக்குனர்களிடம் படத்தில் இந்த காட்சி எடுப்பதற்கு செலவு அதிகமாகும், வேண்டாம் என்று கூறுவார்கள் ஆனால் இயக்குனர் விக்ரமன் இந்த காட்சி வேண்டாம் செலவை குறைத்துக் கொள்வோம் என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை கூறுவார்’’ என்று பாராட்ட, அதைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, ‘’சூப்பர் குட் ஃபிலிம்ஸின் இரண்டு தூண்கள் கே.எஸ். ரவிக்குமாரும், விக்ரமனும்.இவர்கள் இயக்கிய படங்கள் வெற்றி பெற்றதால்தான் தொடர்ந்து நல்ல படங்களை தயாரிக்கவும் முடிந்தது, புது இயக்குனர்களுக்கு படம் இயக்க வாய்ப்பு தரவும் முடிந்தது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;