சந்தோஷ் சிவனின் ‘இனம்’ - ஃபர்ஸ்ட் லுக்!

சந்தோஷ் சிவனின் ‘இனம்’ - ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகள் 5-Jun-2013 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிறந்த ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலேயே பல விருதுகளை வாங்கி புகழ்பெற்று விளங்கி வருபவர் சந்தோஷ் சிவன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘உருமி’. இந்த படத்தை தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் சந்தோஷ் சிவன்.

இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட எட்டு அனாதை குழந்தைகளின் வாழ்வியலை சித்தரிக்கும் இப்படத்திற்கு ஆங்கிலத்தில் ‘சிலோன்’ என்றும் தமிழில் ‘இனம்’ என்றும் பெயர் வைத்திருக்கிறார். தமிழில் உருவாகி வரும் ‘இனம்’ படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சந்தோஷ் சிவன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;