நடிகர் விஜய் பார்த்து பாராட்டிய படம்!

நடிகர் விஜய் பார்த்து பாராட்டிய படம்!

செய்திகள் 3-Jun-2013 3:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வின்செண்ட் செல்வா இயக்கி வெளிவரத் தயாராக இருக்கும் படம் ‘துள்ளி விளையாடு’. ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள இப்படம் நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது.

படத்தினைப் பார்த்து விட்டு இயக்குனர் வின்செண்ட் செல்வாவை மிகவும் பாராட்டியிருக்கிறார் விஜய். “கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படம் புதியவர்கள் நடித்த படம் போன்றே தெரியவில்லை... நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் போராட்டங்களை ரசிகர்கள் நிச்சயம் மிகவும் விரும்புவார்கள்..” என்றார்.

‘யு சான்றிதழ்’ பெற்றிருக்கும் ‘துள்ளி விளையாடு’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;