அஜித், யுவனுடன் ஏ.ஆர்.ரஹ்மான்!

அஜித், யுவனுடன் ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 3-Jun-2013 10:37 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபகாலமாக தான் இசை அமைக்கும் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளரை பாட வைத்து அழகு பார்ப்பது ஒரு ட்ரென்ட் ஆகிவிட்டது போலும்! தனுஷ், பார்வதி மேனன் நடிப்பில், பரத்பாலா இயக்கி வரும் ‘மரியான்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, இந்த படத்தில் இடம்பெறும் ‘கடல் ராசா….’ என்ற பாடலை யுவன் ஷங்கர் ரஜாவை பாட வைத்து பதிவு செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த படத்தைத் தொடர்ந்து இப்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து வரும் பெயர் வைக்காத படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து வர, இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒரு பாடலை பதிவு செய்ய இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. ‘மரியான்’ படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா பாடிய பாடல் வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில் யுவன் இசையில், ஏ.ஆர்.ரஹ்மான் பாட இருக்கும் பாடல் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;