இளையராஜா இசையில் பாடல்! மதன் கார்க்கி மகிழ்ச்சி!

இளையராஜா இசையில் பாடல்!  மதன் கார்க்கி மகிழ்ச்சி!

செய்திகள் 1-Jun-2013 2:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசைஞானி இளையராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்துவும் இணைந்து பணியாற்றி பல வருடங்கள் ஆகின்றன. ஆனால் இவர்களது வாரிசுகளான யுவன் ஷங்கர் ராஜாவும், மதன் கார்க்கியும் இணைந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கும் நூறாவது படமான ‘பிரியாணி’ படத்திற்காக பாடல் எழுதிய மதன் கார்க்கி, அடுத்து இளையராஜா இசை அமைக்கும் மிஷ்கினின் ’ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கும் பாடல் எழுதுவதாக ஒரு தகவல் வந்தது.

ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றும், ஒருவேளை அதுபோன்ற ஒரு சந்தர்பம் வந்தால் அதை நான் ரொம்பவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என்றும் ‘டுவீட்’ செய்திருக்கிறார் மதன் கார்க்கி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;